Categories
மாநில செய்திகள்

“மதுக்கடைகளை மூட சொல்லுங்க”… உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மக்கள் நீதி மய்யம்..!

மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுநபா கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் கருப்பு உடையணிந்து, கருப்புக் கொடியேந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார். திமுக கூட்டணி கட்சிகளும் கருப்பு உடையணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், மதுக்கடைகளை திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |