Categories
மாநில செய்திகள்

“வெல்லம் ஒழுகுதுன்னு சொல்லுவாங்க”….‌. அதுக்கு தான் பணம் கொடுக்கிறோம்… அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்….!!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கரும்பு வழங்கப்படவில்லை. அதோடு விவசாயிகளிடமிருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்யாததால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விவசாயி களிடமிருந்து எதற்காக கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்பதற்கு அமைச்சர் எ.வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு பொருட்கள் கொடுக்கும்போது குறை சொல்கிறார்கள். கரும்பு கொடுக்கும் போது முக்கால் கரும்பு, ஒன்னேகால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி கொடுக்கும் போது சிறிய முந்திரியாக இருப்பதாகவும், வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் குறை சொல்கிறார்கள். இதனால்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ரூபாய் 1000 ரொக்க பணமாக கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‌ அமைச்சர் இவ்வராக சொன்னது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |