தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்ததோடு ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளது.
இந்த படம் தொடர்பாக நடிகர் விக்ரம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இதன் காரணமாக என்னை யாராவது கிள்ளி இது கனவில்லை என்று கூறுங்கள் என்று நெகிழ்ச்சியோடு விக்ரம் பதிவிட்டுள்ளார். நடிகர் விக்ரமின் சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமுக்கு மீண்டும் கம்பேக்காக அமைந்துள்ளது. மேலும் நடிகர்கள் விக்ரமின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.