Categories
அரசியல் மாநில செய்திகள்

”குறளை தப்பு இல்லாம சொல்லுங்க” அசிங்கபட்ட முக.ஸ்டாலின் ….!!

முக.ஸ்டாலின் திருக்குறளை தவறுமின்றி உச்சரித்தால் பாஜக பதிவை நீக்கி விடுகின்றோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதில் இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும் தெளிய வேண்டும் என விமர்சித்திருந்தார்கள்.

தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் பதிலுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தமிழக பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளது.

Categories

Tech |