ஃபேஸ்புக் நிறுவனம் திடீரென முடங்கிய காரணத்தால் டெலிகிராம் புதிதாக 7 கோடி பயனர்களை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4-ஆம் தேதி இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதன் காரணமாக டெலிகிராம் செயலியை சுமார் 7 கோடி புதிய பயனர்கள் ஒரே நாளில் பதிவிறக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவல் துரோவ் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சில பயனர்கள் ஒரே நேரத்தில் பலரும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் செயலியின் வேகம் குறைந்ததை உணர்ந்திருக்கலாம். இருப்பினும் வழக்கமாகவே செயலிகள் வேலை செய்ததாக பெரும்பாலான பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் தன்னுடைய புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்ட போது டெலிகிராம் செயலியில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.