உலக அளவில் வாட்ஸ் அப்பு-க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்ட செயலி டெலிகிராம். இந்த செயலி தற்போது புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மாதம்தோறும் இந்திய மதிப்பீட்டில் 390 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது கிடைக்கும் சேவையை காட்டிலும் இரு மடங்கு சேவையை பயனர்கள் பெற முடியும். தற்போது ஃபைல்கள் பதிவேற்றும் 2ஜிபி மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரீமியம் சேவையில் 4 ஜிபி வரை பதிவேற்றம் செய்யலாம்.
எக்ஸ்குளூசிவ் ஸ்டிக்கர்ஸ், விரைவான தரவிறக்க வசதி உள்பட பல வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இலவச பதிப்பில், 2 ஜி.பி., அளவுள்ள ஆவணங்களை மட்டுமே அனுப்ப இயலும். இலவச பதிப்பை விட, பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, நெட்வோர்க் இணைய வேகத்திற்கு ஏற்ப, அதிவிரைவில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்.இந்த புதிய சேவை பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.