தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த தண்டனையானது தெலுங்கானா மாநில மக்களிடையே மட்டுமல்லாமல் தேசிய அளவில் அனைத்து மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தண்டனை குறித்து தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் குற்றவாளிகள் 4 பேரும் மிக சுலபமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த தண்டனை அவர்களுக்கு போதாது பிரியங்கா ரெட்டி அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பொழுது எவ்வளவு துன்பம் அனுபவித்து இருப்பார் பாலியல் வன்கொடுமை என்பது இருப்பதிலேயே மிகப் பெரிய வன்முறை ஆகவே அத்தகைய தவறுகள் செய்வோருக்கு இத்தகைய தண்டனைகள் மிகவும் ஈஸியானது ஆகிவிடும். ஆகவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் செலுத்தப்பட வேண்டும் அவர்கள் அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.