பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு பாட்னாவில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2024-ம் ஆண்டு நடைபெ றும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தூக்கி எறிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதனால் நான் அனைத்து கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனவே பீகாரில் வருகிற 2025-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் துணை முதல்வர் தேஜஸ்வினி யாதவ் தலைமையில் முன்னிலைப்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் இதனால் பீகார் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதோடு நிதிஷ்குமார் தேசிய அரசியலில் இனி கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.