ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஹூமாயூன் பெற்றோரை இரு மர்ம நபர்கள் கடத்தி மாணவர் அமெரிக்கா செல்வதற்கு என்ன காரணம்? உங்களுக்கும் அமெரிக்காவிற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும் அவன் இங்கு வந்தவுடன் தலீபான் தீவிரவாதிகள் கடத்தி விடுவார்கள் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய ஹுமாயூன் பெற்றோர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு ஹுமாயூனை அனுப்பி சிறிது நாட்கள் கழித்து அங்கிருந்து கனடாவில் வசிக்கும் அவரின் சகோதரியின் கணவர் வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டனர்.
எனவே கிறிஸ்தவ அமைப்பினரின் அவருக்கு உதவி, கனடா அனுப்பிவிட்டனர். தன்னந்தனியாக கனடா சென்ற ஹுமாயுன் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளார். எப்படியோ போராடி கடந்த 2016 ஆம் வருடத்தில் வாழிட உரிமம் பெற்றுவிட்டார். தன் பெற்றோரையும் கனடாவிற்கு அழைக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் கனடாவில், குடும்பத்துடன் வாழ வேண்டுமானால், வருடத்திற்கு 40,000 டாலர் வருமானம் தேவைப்படும். ஆனால் ஹுமாயூன் வேறு வழியின்றி சகோதரி கணவரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதால் எவ்வாறு பெற்றோரை அழைத்துவருவார்.
எனவே மனிதநேயம் மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் பெற்றோரையும் சகோதரியையும் கனடா வரவழைக்க கடந்த 2017 ஆம் வருடத்தில், ஹுமாயூன் கோரிய விண்ணப்பம் புலம்பெயர்தல் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் விண்ணப்பம் விண்ணப்பித்த நிலையிலேயே இருக்கிறது. பெற்றோர் ஒரு புறம் பதறிக்கொண்டிருக்க, ஹுமாயூன் பெற்றோருடன் சேரும் ஆவலுடன் காத்திருக்கிறார்..!