தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி,
சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிப்பது சருமத்தைப் பொலிவாக்கி அழகை கூட்டும். கிராம்பு சூட்டை தணிக்கும். இஞ்சி அஜீரணம், பித்தம் போன்ற பிரச்சனைகளை தடுக்கும். நாள்தோறும் தேனீர் தயார் செய்வதற்கு முன் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுதல் உடல் ஆரோக்கியத்தை பெருக்கும்.