பசியின்மையை அதிகரிக்கும் தேநீர் செய்வது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பொதுவாக வேலை என்று ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே உடலில் பசி ஏற்படும். வேலை செய்தும் கூட ஒரு சிலர் பசியின்மையால் அவதிப்படுவது உண்டு. இக்காலகட்டத்தில் பசியை அதிகரிக்க செய்வது மிக அவசியம்.
ஏனெனில் அதை கோட்டை விட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பசியின்மையை அதிகரிக்கும் தேநீர் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் சோம்பு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது சுக்குப்பொடி, ஓமம், உப்பு போடவும். இதில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர பசியின்மை நீங்கி பசி தூண்டப்படும். இதய துடிப்பும் சீராக்கும்.