உலக நாடுகளில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுகாதார நிதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயன்படுத்தப்பட்டதால் காசநோய் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் நபர்கள் காசநோயால் பாதிப்படைகிறார்கள். குணப்படுத்தக்கூடிய அந்த நோயை அழிப்பதற்காக கடந்த பல வருடங்களில், காணப்பட்ட மேம்பாடு, வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசநோயால் பாதித்த பலருக்கு, அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் வெளியிட்ட காசநோய் குறித்த வருட அறிக்கையில் காச நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் சுமார் 4 மில்லியன் நபர்களுக்கு காசநோய் உண்டானது கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.