சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமின்மை தெரிவிப்பவர்களிடமிருந்து கட்டாயமாக வரி வசூலிக்க வேண்டும் என்று ஆப்ரேஷன் லிபெரோ என்னும் கட்சி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆப்ரேஷன் லிபெரோ என்னும் கட்சி உள்ளது. இந்த கட்சியின் உறுப்பினரான sanero amitty கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வைத்து முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமின்மை தெரிவிப்பவர்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஏனெனில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கொரோனா பாதித்தால் அவர்களிடமிருந்து அத்தொற்று மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்று ஆப்ரேஷன் லிபெரோ கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.