டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று மதுரை உயர்நீதிமன்ற அரசுக்கு கேள்வி கேட்டு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன ? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன ? என்பதை பதில் மனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.