Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மது பிரியர்கள் கவனத்திற்கு” 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக செந்தில் ராஜ் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கழக விதிகளின்படி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த டாஸ்மாக் கடைகள் வருகிற 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும்.

அதன் பிறகு குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது. மொத்தம் 35 கடைகள் மூடப்படும். இந்த உத்தரவுக்கு அனைத்து மதுபான கடை ஊழியர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்‌. மேலும் அறிவிப்பை மீறி டாஸ்மாக் கடைகள் திறப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலிருந்து கடத்தல், பதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |