திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டதில் உள்ளுறை அடுத்த, காக்களூர் பகுதியில் தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாகி மேலாளரான சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்தியபோது ,சென்னை கொரட்டூர் பகுதி மேட்டு தெருவைச் சேர்ந்த 43 வயதுடைய கோவிந்தன் என்பவர் தனியார் கம்பெனியில் உள்ள செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார் ,அவர் திருடிய 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.