Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் அறிவிப்பு ….!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கட்டணத்தை அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை செய்ய 2,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் ஒரு நாளைக்கு 3,250 ரூபாயும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் 5,480 ரூபாயும், அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் இருந்தால் 9,580 ரூபாயும் சிகிச்சை கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

Categories

Tech |