Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனிமைப்படுத்தப்பட்ட சிஎஸ்கே அணி..! நாளைய போட்டி ரத்து செய்யப்படுமா … வெளியான தகவல் …!!!

நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் -சென்னை அணிகளுக்கிடையான போட்டி, ரத்து செய்யப் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , உயிரிழப்புகள்  அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபில் போட்டியில் பங்குபெற்றுள்ள வீரர்கள் ,பணியாளர்களுக்கு  கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா அணி 2 வீரர்களுக்கும் மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மற்றும் பணியாளருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால்  நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதனால் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் ஹோட்டல்களில் ,தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை   ராஜஸ்தான்- சென்னை அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள பயிற்சியாளர் பாலாஜிக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ,வீரர்கள் ஆறு நாட்கள் ,தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது

Categories

Tech |