Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை குடமுழுக்கு” தமிழர்கள் கோரிக்கை நியாயமானது தான்…… ராமதாஸ் ட்விட்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பதிவிட்ட  அவர்,

மற்றொரு பதிவில் சிவபெருமான் தமிழ்நாட்டில் தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வதுதானே சரியான செயலாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |