தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தனிநபர்கள் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள கோவில் விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தேவையில்லாத நடைமுறைகள் தொடர்வதை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்.