இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் இந்த நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இந்த ஆடியோவில் பேசிய நர்ஸ் 30 ஆண்டுகளாக குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும், 30,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே குழந்தையை முன்பதிவு செய்ய முடியும் என்றும், பிறப்பு சான்றிதழுடன் குழந்தை வேண்டுமென்றால் 70,000 ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் அதிரடியாக குழந்தைகளை வாங்கி, விற்றது உண்மையா? அல்லது தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறீர்களா? என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்னையின் முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்த பின் சம்மந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.