விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், ஊர்வலத்தை நடத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…!!
