தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டாலும், மாலை 7 மணிக்குள் மூட வேண்டும் என நேரம் கட்டுபாட்டை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அதில் உடற்பயிற்சிக் கூடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டிருந்தன. தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவை திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே உடற்பயிற்சி கூடங்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அண்மையில் பிறப்பித்தது.
ஆனால் அதில் உடற்பயிற்சி கூடங்களை திறந்து முடுவதற்கான நேர வரையறைகள் எதையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கொரோனா நோய் தொற்றில் நிலைமைக்கு ஏற்ப, நேரத்தில் வரையறுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை 13 மணி நேரங்களுக்கு உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம் திருவள்ளூர் போன்றவற்றில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.