தமிழகத்தில் 15 மாநகராட்சியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ஜூலை 1 முதல் கிராமங்களில் உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி எல்லை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன.
வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிய வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், கர்ப்பிணிகள், 10 வயதிருக்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.