தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸுக்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவம் தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் பதிகபட்டவர்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 17 ஆயிரத்து 125 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஆண்கள், 10 பெண்கள் உட்பட 22 பேர் கொரோன வைரஸுக்கு பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அதிகபட்சமாக சென்னையில் 8 மாவட்டங்களில் 12 பேருக்கு தொற்று பதிவாகி உள்ள நிலையில் 30 மாவட்டங்களில் பதிப்பு இல்லை.
இதற்கிடையில் 12 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட 4 முதியவர்களுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளது. இதுவரை 34, 53, 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை 38, 25 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ள நிலையில் 29 நாளாக தொடர்ந்து நேற்று கொரோனா வைரஸுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி 228 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று நிலையில் 13 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று 24 பேருக்கு வைரஸில் இருந்து குணமடைந்து உள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் 34, 14, 957 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.