தமிழகத்தில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 3501 இடங்களில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 33 மாவட்டங்களில் உள்ள 5,36,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த நியாய விலை கடையை செயல்படுத்துவது என்பதை பற்றிய விவரங்களை வருகிற 20-ஆம் தேதிக்குள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு மண்டல அதிகாரிகள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்பது கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவங்கி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.