லாபகரத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது 55 வயதுடைய தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஓய்வு வழங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
இதனிடையே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பிப் பெற வலியுறுத்தியும் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.