தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டின் காரணமாக வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாளய அமாவாசை புதன்கிழமை அன்று வருவதால் கட்டுப்பாடு ஏதும் இருக்காது என்று எண்ணிய மக்கள் ஏமாறும் வண்ணம் நாளை கோவில்களுக்கு செல்லும் புண்ணிய தீர்த்தங்களில் தற்பணம் செய்யவும், அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை அன்று புண்ணிய தலங்களுக்குச் சென்று நீர் நிலைகளில் நீராடி எள்,தண்ணீர் ஆகியவற்றை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாளை தமிழகம் முழுவதும் மகாலய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியவில்லை என்று அதிருப்தியில் உள்ளனர்.