தமிழகத்தில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது ஆகஸ்ட் 23-ஆம் தேதி விவாதம் நடந்தது. அந்த விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவரும் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் பிறகு மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்று சட்டசபை கூடியது.
அதில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 20 முக்கிய மசோதாக்கள் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 23 நாட்கள் நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.