ராதாபுரத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் அலகு தேர்வுகள் தொடங்க இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து 1-8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டும், ஆலோசனை நடத்தப்பட்டும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்களை பள்ளி கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2021-22 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அந்த மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் அலகு தேர்வுகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி 50 மதிப்பெண்களுக்கு 1 1/2 மணி நேரம் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்வானது டிசம்பர் 24-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். மேலும் பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான மாணவர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்யும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.