Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ், தமிழ்ன்னு சொல்லும்…!! உலகளவில் DMKவை இழுத்த டி.ஜெ… செம கடுப்பில் உப்பிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டதற்கு இந்த அரசாங்கம் வாய்மூடி இருக்கின்றது. எதுக்கு இந்த அரசாங்க வாய் திறந்து இருக்கு சொல்லுங்க. எல்லாத்துக்குமே இந்த விடியாத அரசு,  வாய மூடிட்டு தான் இருக்காங்க.  தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சட்டப் படிப்பு படித்தார்கள். இவர்கள் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும்,  அந்த அரசாங்கத்திற்காவது ஒரு கடிதம் எழுதி,  கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.

இன்னைக்கு ஆந்திரா மக்கள், தமிழ்நாடு மக்கள், கேரளா மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்கின்ற மாநிலம். இன்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கும்போது என்ன பண்ணனும் ? ஒரு கடுமையான நடவடிக்கையை நீங்க எடுக்க வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று சொல்லி இருக்கலாம். ஆனால் வாயை திறக்கவில்லை.

அண்டை மாநிலத்தில் இருந்தாலும் சரி, அண்டை நாட்டில் இருந்தாலும் சரி,  தமிழ் தமிழ் என  சொல்லுவாங்களே ஒழிய..  தமிழ் தாக்கப்படும் போதும் சரி, தமிழ்நாட்டு மக்கள் தாக்கப்படும் போதும் சரி, தமிழர்கள் உரிமை பறிக்கப்படும் போதும் சரி, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்புக்கு  இடையூறாக இருக்கும் நிலையிலும் சரி,  எந்த நிலையிலும் வாய் திறக்காத ஒரே அரசாங்கம் அது உலகத்திலே எதுனா அது திராவிட முன்னேற்றக் கழக விடியாத அரசாங்கம் என விமர்சித்தார்.

Categories

Tech |