Categories
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பு ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.. தமிழின படுகொலைக்கு நீதி..!!

இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐநா சபை முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை தமிழர்கள் சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நீதி வேண்டும் என்றும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அடுத்த நாளும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தமிழின மக்களின் அழிவை வெளிக்கொண்டுவர நடத்தப்பட்ட மிக முக்கியமான இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தமிழ் மக்கள் இதில் பங்கேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |