Categories
மாநில செய்திகள்

வேளாண் பட்ஜெட்… “நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும்”… கமல் ட்விட்..!!

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும்” என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்..

தமிழக சட்ட பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.. சட்டப்பேரவையில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. இந்த அறிவிப்புகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்..

இந்நிலையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்.. அதில்,  விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |