டெல்லியில் மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்தப் கூட்டத்தின் போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொது விநியோகமானது சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
அதன் பிறகு தமிழக நியாய விலை கடைகள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரிய விஷயமாகும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை மக்களுக்கு சிறப்பான முறையில் விநியோகிக்க விரும்பும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். அதன் பிறகு 2023-244 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனையடுத்து குறிப்பிட்ட காலத்திற்குள் அரிசி விநியோகம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ரேஷன் கடைகளின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளை மாநில அரசுகள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை வினியோகம் செய்வதற்கு மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 91 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.