Categories
மாநில செய்திகள்

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு!

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என 40 முதல் 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில் மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |