Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – ப. சிதம்பரம் ட்வீட்!

தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும்.

மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு மக்கள் உலக நடப்புகளை அறிந்தவர்கள், புத்திசாலிகள். அரசு நடவடிக்கையைப் பாராட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது கொரோனா வைரஸின் தாக்கம் உலக போரை விட அதிகமாக உள்ளது. இதையடுத்து வரும் 22ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஊரடங்க உத்தரவு தமிழத்தில் கடைபிடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு பஸ்கள், ரயில்கள் இயங்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று காலை தமிழக – கேரள எல்லையில் உள்ள அனைத்து சுகஞ்சவடிகளும் மூடப்பட்டது. அதேபோல ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டு அத்திவாசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |