Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த கோரி வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கறிஞர் ஜான் மில்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை உள்பட 37 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் அவர்களை தனிமைப்படுத்துமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Categories

Tech |