Categories
மாநில செய்திகள்

போதை தரும் மருந்துகளை விற்றால் இனி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.

மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |