விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார் .
மேலும் விவசாயிகளின் நலம்காத்து ,குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் நிலைகள் மேம்பாடு திட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.