Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த போனையும் எடுப்பதில்லை” தமிழக தேர்தல் அதிகாரி மீதே புகார்…!!

தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில்  சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மீது புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  எந்த தொலைபேசியில் அழைப்பையும் எடுப்பதில்லை. குறுஞ்செய்தி அனுப்பினால் கூட பார்த்து பதிலளிப்பதில்லை. எந்த தகவலையும் அவரிடம் நேரடியாகச் சொல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.மேலும் இன்று நடந்த தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் தேர்தல் விதிகளை பின்பற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |