Categories
அரசியல் மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள்… பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

இனி வருடந்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்  என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன சட்ட மானியக்கோரிக்கை விவாதங்களின் முடிவில் இறந்தோரும் விதி 110இன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வந்தார் அதன்படி,

Image result for எடப்பாடி

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், தமிழகத்தில் நீர் மேலாண்மை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா,  உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து இனி நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Categories

Tech |