Categories
அரசியல்

கவனமா இருக்க….! ”முழுமையா பாருங்க” முதல்வர் போட்ட உத்தரவு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதியாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதியில் இருந்து பச்சை பகுதியாக மாற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும். அப்படி வந்தால்தான் தொழிற்சாலையை நடத்த முடியும்.

மக்கள் இயல்பாக தங்களுடைய பணியை மேற்கொள்ள முடியும். அதற்கு தான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள். இருந்தாலும் மேலும் இந்த நோய் பரவாமல் தடுத்து இயல்பு நிலைக்கு வரவேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, எந்த மாவட்டம் பச்சை மாவட்டமாக இருக்கின்றதோ அந்த பகுதியில் படிப்படியாக தொழில் துவங்குவதற்கு அரசு உங்களுக்கு சரியான உத்தரவு வழங்கும் அதை பின்பற்றி நீங்கள் அந்த பகுதிகளை தொழில் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கலாம்.

காவல்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அனாவசியமாக வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது மிக மிக முக்கியம் மாநில எல்லையில் காவல் துறை அதிகாரிகள் கவனமாக ஈடுபட்டு,  முழுமையாக பரிசோதனை செய்யப்படவேண்டும். அனுமதி சீட்டு இருந்தால்  அவர்களை அனுமதிக்கலாம் என்று காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |