ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் துவரம் பருப்பு மட்டும் ஜூன் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும். ஜூன் 1ஆம் தேதி 4ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.