கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கான cowin.in இணையதள பக்கத்தில் தமிழ்மொழி இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
cowin.in இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு cowin.in வகையிலான இணைய தளத்தை உருவாக்கியது.
இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே ஆரம்ப காலத்தில் இருந்தது தற்போது புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, கன்னடம், ஒரியா போன்ற மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்மொழி இல்லாத காரணத்தினால் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்ட காரணத்திற்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.