அயல்நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது.
இதனால் அயல் நாடுகளில் மருத்துவம் படித்த நம் தமிழ்நாட்டை சேர்ந்த 850 பேர் பயிற்சி மருத்துவராக பணியாற்ற பதிவு செய்துள்ளனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர். எனவே மீதமுள்ள 600 இளம் மருத்துவர்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.