பிரான்ஸ் இளைஞர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கந்தசாமி மற்றும் சுகந்தி என்ற தம்பதியின் மகளான கிருத்திகா, சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடன் பணிபுரியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் என்பவரை காதலித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆசானே ஒச்சோயிட் மற்றும் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.
மணமக்களின் பெற்றோர்கள் இருவரும் பட்டு வேட்டி மட்டும் பட்டு சேலை அணிந்து, அர்ச்சகர்கள் மந்திரம் ஓத தமிழ் பாரம்பரிய முறைப்படி அவர்களின் திருமணம் நடந்திருக்கிறது. திருமண விருந்தில் இட்லி, சாம்பார், தோசை, வடை, இடியாப்பம் போன்ற உணவுகளை பிரான்ஸ் நாட்டினர் விரும்பி சாப்பிட்ட்டுள்ளனர்.