அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை அணி, தமிழ்மொழி கல்விக்கொள்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைக்கு பல காலமாக பாடுபட்டவர்களை கொண்டிருக்கும், “அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை” அணியானது, ஒரு போதும், தமிழீழ விடுதலைக்கு எதிரான செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டிருக்காது என்றும், தவறுகள் நிகழ்ந்தால் உடனே அவற்றைத் சரி செய்துக்கொள்ளவும் தயங்காது என்றும் உறுதி கூறியுள்ளது.
12 நாடுகளுடனான கல்விக் கழகங்களில் சேர்ந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் மாணவர்களின், தமிழ்மொழிக் கல்விக் கொள்ளைகளை வகுப்பது குறித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், தாய்மொழிக் கல்வியை அதிகம் மேம்படுத்த, அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அவர்களோடு சேர்ந்து தமிழ் கல்விப் பணியாற்றுவதற்கு, தமிழறிஞர்கள், மொழிப்பற்றாளர்கள் மற்றும் கல்விமான்கள் போன்றோரை கேட்டுள்ளார்கள்.