Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்”….. பழனியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் பெற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரில் உள்ளே நுழைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

இதனிடையே 2018ல் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு இன்றி இருந்தார். அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதனை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சேலம் திரும்பிய அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து அவர் பழனிக்குச் சென்று முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.

Categories

Tech |