Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“புளி தரும் பொன்னான நன்மைகள்”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம்.

புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும்.

புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது.

இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்ததை சரி செய்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது. இதன் காரணமாக இதயம் சம்மந்தமான நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

புளியில் உள்ள வைட்டமின் – ஏ பார்வை சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

உடம்பில் ஏதேனும் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது புளி கரைசல் பட்டால் காயம் வேகமாக ஆறிவிடும். மேலும் இளமையான சருமத்தை பெறுவதற்கும் புளி உதவுகிறது.

Categories

Tech |