Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அணிவகுப்பு!”.. அமெரிக்க வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தினர்..!!

தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் எம்117 என்ற அமெரிக்க நாட்டின் தயாரிப்பான கவச பாதுகாப்பு வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வந்துள்ளார்கள். மேலும் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான, MI-17 வகை ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்த பயங்கரவாதிகள் பலரும் M4 வகை துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, எனயதுல்லா குவாரஸ்மி, புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் கமாண்டோ வீரர்கள் 250 பேருக்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது என்று கூறியுள்ளார். அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய சமயத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புடைய ஆயுதங்களை அங்கேயே விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |